53. கழற்சிங்க நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 53
இறைவன்: ஏகாம்பரேஸ்வரர்
இறைவி : ஏலவார்குழலி
தலமரம் : மா
தீர்த்தம் : சிவகங்கை
குலம் : மன்னர்
அவதாரத் தலம் : காஞ்சிபுரம்
முக்தி தலம் : காஞ்சிபுரம்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : வைகாசி - பரணி
வரலாறு : இவர் ஒரு பல்லவ மன்னர். தன் மனைவியுடன் திருவாரூர் கோயிலை வலம் வரும்போது ஒருநாள் அங்கே இருந்த ஒரு மலரை எடுத்து முகர்ந்தார். அங்கே வந்த செருத்துணை நாயனார் என்பவர் ஆத்திரம் கொண்டு இறைவனுடைய மலரை எடுத்து முகர்ந்தனையே என்று அரசி என்றும் பாராமல் தன் வாளை எடுத்து அவரது மூக்கினை வெட்டினார். அரசர் கழற்சிங்கர் மலரை முதலில் எடுத்தது கைதானே என்று அவள் கையை வெட்டினார்.
முகவரி : அருள்மிகு. ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் – 631501 காஞ்சிபுரம் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : திரு. ஜெ.நாகராஜன்
அலைபேசி : 9894149266, அண்ணா.சச்சிதானந்தம் அலைபேசி :9444999300

இருப்பிட வரைபடம்


கட்டிய வுடைவாள் தன்னை உருவிஅக் கமழ்வா சப்பூத்
தொட்டு முன்னெடுத்த கையாம் முற்படத் துணிப்ப தென்று
பட்டமும் அணிந்து காதல் பயில்பெருந் தேவி யான
மட்டவிழ் குழலாள் செங்கை வளையொடுந் துணித்தா ரன்றே.

- பெ.பு. 4110
பாடல் கேளுங்கள்
 கட்டிய வுடைவாள்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க